முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”அதிமுக கூட்டணிக்கு வர ரூ.100 கோடி”..!! ”எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்ததில்லை”..!! இறங்கிய அடித்த உதயநிதி..!!

Deputy Chief Minister Udhayanidhi Stalin has criticized Dindigul Srinivasan for saying that they are asking for 100 crores to join the AIADMK alliance.
10:46 AM Nov 25, 2024 IST | Chella
Advertisement

அதிமுக கூட்டணிக்கு வர 100 கோடி கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை குறிப்பிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Advertisement

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. ஆனால், அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும், திமுக போன்று ஓர் வலுவான கூட்டணி அமைக்க அக்கட்சி போராடி வருகிறது. இதனை அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனே வெளிப்படையாக கூறிவிட்டார்.

அதாவது, திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ”கூட்டணிக்கு வருவதற்கு 50 கோடி, 100 கோடி, 20 சீட் என கேட்கிறார்கள். எதோ நெல் மூட்டை வியாபாரம் போல பேரம் பேசுகின்றனர். அவர்களிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தொடர்ந்து பேசி வருகிறார். விரைவில் நல்ல செய்தி வரும்” என கூறினார். இதனைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சரும், துணை முதல்வமான உதயநிதி ஸ்டாலின், ”எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்தது கிடையாது. திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அதிமுகவில் கள ஆய்வு நடக்கிறது. ஆனால் அங்கு நடப்பது வேறு” என்று விமர்சித்தார்.

மேலும், “திமுக நிர்வாகிகள் நமது திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read More : இன்ஸ்டா காதலனுடன் 2-வது திருமணம்..!! தடையாக இருந்த 5 வயது குழந்தை..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!

Tags :
உதயநிதி ஸ்டாலின்திண்டுக்கல் சீனிவாசன்துணை முதல்வர்
Advertisement
Next Article