For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடி தூள்...! கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டி...! முதல் பரிசாக தலா ரூ.25,000 அறிவிப்பு...!

06:10 AM Jan 07, 2024 IST | 1newsnationuser2
அடி தூள்     கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டி     முதல் பரிசாக தலா ரூ 25 000 அறிவிப்பு
Advertisement

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கால்பந்து, கையுந்துபந்து மற்றும் கபாடி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடுவதற்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் கால்பந்து, கையுந்துபந்து மற்றும் கபாடி ஆகிய விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டரங்கில் 10.01.2024 மற்றும் 11.01.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு (இருபாலருக்கும்) நடைபெறவுள்ளது. காலை 8.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது.

Advertisement

இப்போட்டிகளில், 15 வயது முதல் 24 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும், கபாடி போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக தலா ரூ.20,000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.10,000/-மும் மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000/- மும் வழங்கப்படும். கால்பந்து போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக தலா ரூ.25,000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.20,000/-மும் மூன்றாம் பரிசாக தலா ரூ.10,000/- மும் வழங்கப்படும். கையுந்து பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக தலா ரூ.15,000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.10,000/-மும் மூன்றாம் பரிசாக தலா. ரூ.5,000/-மும் வழங்கப்படும்.

மேலும், இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். எனவே, மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும். மேலும் விபரங்களுக்கு அ.சிங்குதுரை. கையுந்துபந்து பயிற்றுனர் தொலைபேசி எண் 85086 41786 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட அனைத்து குழு விளையாட்டுகளுக்கும் தொடர்பு கொண்டு 09.01.2024 அன்று மாலை 5,00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் இப்போட்டிகளில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement