For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த பரபரப்பு..‌! DVAC அதிகாரிகள் மீது FIR பதிவு செய்யுங்க...! தமிழக டி.ஜி.பி.க்கு ED கடிதம்...!

06:20 AM Dec 04, 2023 IST | 1newsnationuser2
அடுத்த பரபரப்பு  ‌   dvac அதிகாரிகள் மீது fir பதிவு செய்யுங்க      தமிழக டி ஜி பி க்கு ed கடிதம்
Advertisement

ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 13 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் உள்ளே 35-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. சோதனையின்போது 50க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத் போலீசாரும் 100-க்கும் மேற்பட்ட மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட 35 பேரும் டிசம்பர் 1ம் தேதி மதியம் 2.30 மணி முதல் டிசம்பர் 2ம் தேதி காலை 7.15 மணி வரை சோதனை நடத்தினர். இந்த நேரத்தில் அவர்கள் 35 பேரும் கீழ்க்கண்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையில் நுழைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட வழக்கிற்கு தொடர்பே இல்லாத அமலாக்கத்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது அங்கித்திவாரியின் அறை அவ்வப்போது பூட்டப்பட்டது. ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அலுவலகத்தையே சூறையாடிவிட்டனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்டவிரோதமாக சோதனை நடத்தியதற்காகவும், அனுமதியற்ற பலரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைய அனுமதித்திற்காகவும், பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்களை திருடியதற்காகவும், வழக்குகளின் ஆவணங்களை செல்போன் மற்றும் பிற மின்னனு சாதனங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதுவரை எத்தனை ஆவணங்கள் மாயமாகி இருக்கிறது என்றும் தெரியவில்லை. எத்தனை ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டது என்றும் தெரியவில்லை. எங்களிடம் 35 பேர் வந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement