முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்தவர் நிலத்தில் வீடு.. அலேக்கா தூக்கி நகர்த்திய ஜாக்கி தொழில்நுட்பம்..!! வேலூரில் நடந்த சம்பவம்!!

In Vellore, the work of moving the house built on the land by another person without demolishing it and moving it to the adjacent land intact by using jockey technology is in full swing.
01:36 PM Jul 31, 2024 IST | Mari Thangam
Advertisement

வேலூரில் தனது இடத்துக்கு பதில் அடுத்தவர் நிலத்தில் 1,500 சதுர அடியில் வீடு கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது அந்த வீட்டை இடிக்காமல் அப்படியே அருகே உள்ள நிலத்துக்கு நகர்த்தப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றும். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Advertisement

ஜாக்கி தொழில்நுட்பம் : ஒரு கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே நகர்த்தி வைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முறையை ஜாக்கி என்று சொல்லப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் 3 முதல் 5 அடி வரை வீட்டை உயர்த்திக் கொள்ளலாம். அதே நேரம் வீட்டையே அலேக்கா தூக்கி வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

இப்படியொரு சம்பவம் தான் வேலூரில் நடந்துள்ளது. அதாவது, வேலூரில் தனது இடத்திற்கு பதில் அடுத்தவர் நிலத்தில் 1,500 சதுர அடியில் வீடு கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்துவாச்சேரி பகுதியில் ஒருவர் புதிதாக 1,500 சதுர அடியில் வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளார். வீட்டை கட்டியவர் தனது நிலத்தைவிட்டு அருகில் இருக்கும் மற்றவரின் நிலத்தில் வீட்டை கட்டி முடித்துள்ளார். இது அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதனால் வீட்டை ஜாக்கி மூலம் நகர்த்த முடிவு செய்தார். வீட்டை இடித்து புதிதாக ஒன்று செலவு அதிகமாக இருக்கும் என்பதால் ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் நகர்த்த முடிவு செய்தார். இதனை அடுத்து, வீட்டை இடிக்காமல் ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் வீட்டை நகர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஜாக்கி தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது?

முதலில் வீட்டில் சுவர்களை சுற்றி பள்ளம் தோண்டி ஒவ்வொரு பக்கமும் ஜாக்கினை பொறுத்துவார்கள். இந்த பணி முடிந்ததும் ஒரே நேரத்தில் ஜாக்கினை இயக்கி மேலே உயர்த்துவார்கள். அதன்பின், நகர்த்தப்பட்ட வீட்டை சிமெண்ட் கொண்டு சமம்படுத்தப்படும். இந்த ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் வீட்டின் தரைத்தளம் மட்டுமே சேதமடையும். மற்றபடி மின் இணைப்பு, பிளம்பிங், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், சுவர்கள் என எதுவும் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; வயநாடு நிலச்சரிவு : தொடரும் பலி எண்ணிக்கை..!! தற்போதைய நிலவரம் என்ன?

Tags :
House builtjockey technologyvellore
Advertisement
Next Article