அடடா.! கண் பார்வை முதல் கொலஸ்ட்ரால் வரை.!அற்புதமான நன்மைகள் நிறைந்துள்ள பீன்ஸ்.!
உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளில் பீன்ஸ் முக்கியமானது. பீன்ஸ் காய்கறியில் வைட்டமின்கள் ஏ, சி, கே, நார்ச்சத்துக்கள், ஃபோலேட் மற்றும் மாங்கனிஸ் ஆகியவை நிறைந்து இருக்கிறது. பீன்ஸில் நிறைந்து இருக்கக்கூடிய நார்ச்சத்து நம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு செரிமானத்தை மேம்படுத்துகிறது. பீன்ஸை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கும் நார்ச்சத்து நம் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை நல்ல சக்தியாக மாற்ற உதவுகிறது.
பீன்ஸில் நிறைந்து இருக்கக்கூடிய வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பீன்ஸ் வைட்டமின் சி சத்துக்களை அதிகமாக கொண்டிருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய தயாமின் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பீன்ஸ் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸ் பல்வேறு நொதிகளையும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களையும் கொண்டிருக்கிறது இவை புற்றுநோயிலிருந்து நம் உடலை காக்க உதவுகிறது.
பீன்ஸ்களில் நிறைந்திருக்கும் கால்சியம் சத்து நம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸில் கரோட்டினாயிட்ஸ் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. பீன்ஸில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீண் செய்தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் அதிக உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. இதன் காரணமாக உடலில் அதிக கலோரிகள் தங்கி இருக்காமல் உடல் எடை குறையும்.