முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அசத்தல் அறிவிப்பு...! கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்கள்...!

10:13 AM Dec 10, 2023 IST | 1newsnationuser2
Advertisement

வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 7-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. மேலும், புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

மழை பாதிப்பு காரணமாக மாணவர்கள் பலரது கல்வி சான்றிதழ்கள் தண்ணீரில் நனைந்து நாசமாகி உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்தது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் சிறப்பு முகாம்கள் இதற்காக நடத்தப்பட உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

Tags :
certificatecollegeEdu departmentPonmudy
Advertisement
Next Article