fbpx

தேசிய செய்திகள்

  • எச்சரிக்கை!. இந்தியாவில் முதல் மரணம் பதிவு!. அரியவகை GBS நரம்பியல் நோய்ப்பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது!. என்ன காரணம்?

    Guillain-Barré Syndrome: மகாராஷ்டிராவின் புனேவில் குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain-Barre syndrome (GBS)) எனப்படும் புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்க்குறி பாதிப்பால் முதல் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

    குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி பலவீனப்படுதன் மூலம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கோளாறு பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே பரவலாக இருக்கும். ஆயினும், இது ஒரு தொற்றுநோய் அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அதிகரித்து வரும் குய்லின்-பார் சிண்ட்ரோம் நோய் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது இந்தநோய் தாக்குதலுக்கு முதல் மரணம் ஆகும். மேலும் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

    அதாவது, சந்தேகத்துக்குரிய வகையில் சோலாப்பூரில் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மரணமடைந்த நபர் புனேவில் இருந்து தொற்று ஏற்பட்ட பின் அவர் சோலாபூருக்குப் பயணம் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குய்லின் பாரே நோய்க்குறியால் இறந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்ததாகவும், இருமல் மற்றும் சளி அறிகுறிகளும். சுவாசிப்பதில் சிரமமும் அவருக்கு இருந்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் மூளை, இரத்தம் மற்றும் குடல் திசுக்களின் உள்ளுறுப்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    குய்லின்-பார் சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும். இது அரிய நரம்பியல் கோளாறு ஆகும். இந்த நிலையில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இந்த கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தலை பலவீனம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். தீவிரமாகும் போது, இது பக்கவாதத்தை உண்டாக்கலாம். குய்லின்-பார் சிண்ட்ரோம் எந்த வயதினருக்கும் வரலாம். இருப்பினும் இந்த கோளாறு பொதுவாக 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும். என்ன தான் குய்லின்-பார் சிண்ட்ரோம் அரிதானது என்றாலும், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    குய்லின்-பார் சிண்ட்ரோம் புற நரம்புகளை பாதிக்கும் நிலையாகும். இதன் முதன் அறிகுறி தசை பலவீனம் மற்றும் கூச்ச உணர்வு. இந்த அறிகுறிகளானது திடீரென்று தோன்றும். அதுவும் இந்த பாதிப்பு உடலின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் மற்றும் இது கால்களில் தொடங்கி கைகள், முகம் வரை பரவும். இந்த பாதிப்பு ஏற்பட்டால், அது நடப்பதைக் கூட கடினமாக்கலாம். குய்லின்-பார் சிண்ட்ரோம்-ன் அறிகுறி லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து, மற்ற அறிகுறிகள் தெரியலாம். முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி, பக்கவாதம், மார்பு தசை பலவீனமாகி, சுவாசிப்பது கடினமாக இருக்கலாம்., பேசுவது மற்றும் விழுங்குவதில் சிரமம், பார்வை பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இந்த அறிகுறிகள் சில நாட்கள் வரை நீடித்து மோசமாகிவிட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் பிரச்சனைக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும் சில சிகிச்சைகளின் மூலம் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

    எதனால் ஏற்படுகிறது? குய்லின்-பார் சிண்ட்ரோம் ஏற்பட முக்கிய காரணம் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி ஆகும். கேம்பிலோபாக்டர் ஜெஜூனி என்பது ஒரு சுழல் வடிவ பாக்டீரியாவாகும். இது உலகளவில் உணவு மூலம் பரவும் இரைப்பை குடல் அழற்சிக்கு முக்கிய காரணமாகும். இது பொதுவாக விலங்குகளின் குடலில், குறிப்பாக கோழிப்பண்ணையில் காணப்படுகிறது. மேலும் அசுத்தமான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சி, பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்கள் அல்லது சுத்திகரிக்கப்படாத நீரை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

    Readmore: இந்த ரகசியத்தை மட்டும் தெரிஞ்சுக்கோங்க, இனி நீங்க வீட்டில் சுடும் பூரி புஸ்ஸுன்னு மட்டும் தான் இருக்கும்..

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]