புதருக்குள் இழுத்துச் சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்..!! பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி தாக்கிய கொடூரம்..!!
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீதித்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஜலால் பகுதியில் பெண் செவிலியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அதே ஊரை சேர்ந்த வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை அந்த பெண் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத புதருக்குள் இழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்த இருவரும் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதுடன், பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி குச்சியை வைத்து தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பி வந்து நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : நாளை தமிழகம் வருகிறார் அண்ணாமலை..!! அதிமுக தவெக நாதக..!! சமாளிப்பாரா..? நடக்கப்போவது என்ன..?