பதவியில் இருந்தால் மட்டும் மரியாதை கிடைக்காது!… செயலில் காட்டவேண்டும்!… தல தோனி ஓபன் டாக்!
ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை பண்புகள் குறித்து தோனி பேசியுள்ளார். அதில், விஸ்வாசத்திற்கும், மரியாதைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன். ஒரு அணியின் ஓய்வறையை எடுத்து கொண்டால் பயிற்சியாளர்கள் குழு, வீரர்கள் அனைவரும் கேப்டனுக்கு மரியாதை அளிப்பார்கள். அதற்கு நாம் என்ன பேசிகிறோம் என்பதைவிடவும், என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். சில நேரங்களில் நாம் பேசாமல் இருந்தால் கூட, செயல்பாடுகள் மூலம் மரியாதை கிடைக்கும்.
ஒரு பதவிக்கோ அல்லது ஒரு பொறுப்புக்கோ வரும் போது மரியாதை கிடைத்துவிடாது. எப்போதும் ஒரு தலைவன் மரியாதையை சம்பாதிக்க வேண்டும். அது நம் செயல்பாடுகள் மூலம் மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் தனித்திருக்கிறோமோ என்று மனதில் அச்சங்கள் எழும். சில நேரங்களில் நமது அணி நம் மீது மற்றவர்கள் நம்பிக்கை வைத்தாலும், நம் மீது நமக்கு நம்பிக்கையே வராது. எப்போது மரியாதையை அதிகாரத்தின் மூலம் பெற முடியாது. அது தானாகவே வர வேண்டும். அப்படியான ஒன்றை விதைத்துவிட்டால், வீரர்களின் செயல்பாடுகளும் நிச்சயம் அதிகரிக்கும்.
அதற்கான முதல்படி தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் வலிமையையும், பிரச்சனையையும் அறிந்து கொள்ள வேண்டும். சில வீரர்களுக்கு பிரஷர் மிகவும் பிடிக்கும். சிலருக்கு பிரஷரே பிடிக்காது. அதற்காக தான் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது அவசியம். அதனை புரிந்து கொண்ட பின், அவரின் பிரச்சனையை பற்றி அந்த வீரரிடம் கூறாமலேயே அதனை நாம் சரி செய்ய தொடங்கிவிடுவோம். அப்படி செய்யும் போது ஒவ்வொரு வீரரும் மனதளவில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதேபோல் சொந்த தேவையில்லாத யோசனைகளும் இருக்காது. சில விஷயங்கள் சரியாக நடக்கும் எப்படி என்பதை பார்க்க வீரர்கள் விரும்புவார்கள்.
அதுதான் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பணி. யாருக்கு என்ன வரும், எப்படி செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்படியான நேரங்களில் திட்டங்களை எளியாக வைத்து வேண்டும். எப்போதும் நான் தலைமை தாங்கிய அணிகளுக்கு பிரத்யேக குணமிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி குணங்கள் உண்டு என்று தெரிவித்துள்ளார்.