For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

50% மானியத்தில் ஆடு, கோழி, பன்றி பண்ணை அமைக்கலாம்..!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

A 50% subsidy is provided for setting up a poultry, goat or sheep, pig farm and for the storage and preservation of fodder and fodder crops.
12:57 PM Nov 23, 2024 IST | Chella
50  மானியத்தில் ஆடு  கோழி  பன்றி பண்ணை அமைக்கலாம்     ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்     மத்திய அரசின் சூப்பர் திட்டம்
Advertisement

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், கால்நடை வளர்ப்புக்கென சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது.

Advertisement

இதன் நோக்கமானது கோழி, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு, செம்மறி, வெள்ளாடு இனங்களை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகும்.

கோழி, வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள், பன்றிகள் பண்ணை அமைக்கவும் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் 50% மானியம் வழங்கப்படுகிறது. வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 500 பெண் ஆடுகள் மற்றும் 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதாவது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது.

கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து கோழிக்குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து 4 வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதாவது ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பன்றி பண்ணை வைக்க முயல்போருக்கும் ரூ.30 லட்சம் வரை மானியம் உண்டு. பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள், 25 ஆண் பன்றிகளுக்கு 50% மானியம் அதாவது ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் தொழில் முனைவோர் அல்லது தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கிக் கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பு வோர் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பிறகு மத்திய அரசின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”உடற்பயிற்சியே செய்தாலும் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இதயநோய் வரும்”..!! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement