For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tn Govt: தமிழக அரசு வழங்கும் ரூ.4,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம்...

07:00 AM Jan 19, 2024 IST | 1newsnationuser2
tn govt  தமிழக அரசு வழங்கும் ரூ 4 000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்     முழு விவரம்
Advertisement

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம். மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது.

Advertisement

தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1234 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மறைவிற்குப் பிறகு அவர்களின் மரபுரிமையர்கள் 70 பேருக்கு தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2023-2024ஆம் ஆண்டிற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2023 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்'. ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்‌ ( வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்) தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு'. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்'.

Tags :
Advertisement