உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மிக காரமான மிளகாய்.! சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா.?!
பெப்பர் எக்ஸ் (Pepper x) என்ற மிளகாய் உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பிடித்துள்ளது. இந்த மிளகாயை கின்னஸ் சாதனைக்காக சாப்பிட்ட ஒருவர் கூறியது, பெப்பர் x மிளகாயை சாப்பிட்டு 3மணி நேரத்திற்கு மயக்க நிலையில் இருந்த போதிலும் காரத்தன்மையை அவரால் உணர முடிந்ததாகவும், இதன் பிறகு உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் பெப்பர் எக்ஸ் மிளகாயில் 2.69 மில்லியன் அலகுகள் காரத்தன்மை உள்ளது. இந்திய கோஸ்ட் மிளகாய்கள் 8,00,00 அலகுகள் காரதன்மை கொண்டுள்ளது. இந்திய மிளகாயை விட பலமடங்கு கூடுதலான காரத்தன்மையை பெற்று உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மிளகாய் என்று பெயர் பெற்றுள்ளது.
பொதுவாக மிளகாயில் உள்ள காப்சைசின் என்ற வேதிப்பொருள் தான் காரத்தை தருகிறது. காரமாக இருந்தாலும் இந்த காப்சைசின் வலியை போக்குவதற்கும், ஆண்டி ஆக்ஸிடென்ட்களாகவும் செயல் படுகிறது. மேலும் கீல் வாதம், நரம்பு வலி, தசை வலி போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
ஆனால் பெப்பர் x மிளகாயில் இந்த காப்சைசின் தன்மை அளவுக்கு அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனை, உணவு குழாயில் புண்கள் ஏற்படுதல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட்டு மிகப்பெரும் பாதிப்பை உடலில் ஏற்படுத்துகிறது.