முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

4 கோடி ரூபாய் சைபர் மோசடி வழக்கில் பெண் கைது.! போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி, தப்பி ஓட்டம்.!

11:23 AM Feb 21, 2024 IST | 1newsnationuser4
Advertisement

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 4 கோடி ரூபாய் சைபர் மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். துரந்தோ எக்ஸ்பிரஸில் ஹரியானாவில் இருந்து புனேவுக்கு, கை விலக்கு பூட்டப்பட்டு, 4 போலீஸ் கான்ஸ்டபிள்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது எப்படியோ கைவிலங்கை கழட்டி விட்டு, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரைத் தேடும் முயற்சியில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சானியா (24) என்கிற குடியா என்கிற சோபியா சித்திக் என்ற பெண், 4 கோடி ரூபாய் சைபர் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அவர் மீது பூனே காவல் நிலையத்தில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, அவரது வீட்டில் இருந்து பூனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் நான்கு ஆண் கான்ஸ்டபிள்கள் அடங்கிய குழு, சானியாவை கைது செய்து, அவரை ஹரியானாவில் இருந்து புனேவுக்கு துரந்தோ எக்ஸ்பிரஸ் மூலம் அழைத்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:10 மணி அளவில் சானியா, கை விலங்கிலிருந்து தனது கைகளை விடுவித்து கொண்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரயில் ரத்லாம் நிலையத்தை அடைந்ததும் அந்தப் பெண் தப்பிச் சென்றதை காவல்துறையினர் உணர்ந்தனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் கோட்டா பகுதியை அடைந்தது தெரியவந்தது. பின்னர் திங்கட்கிழமை அன்று கோட்டா காவல் நிலையத்திலும், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. மாலா சாலையில் உள்ள ஒரு லாட்ஜில், தப்பிச் சென்ற பின், சில மணி நேரம் அந்தப் பெண் தங்கி இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோட்டாவில் உள்ள ஜிஆர்பி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மனோஜ் சோனி, தப்பிச்சென்ற அந்தப் பெண்ணை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி, கை விலங்குகளில் இருந்து ஒரு பெண் தப்பியிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

English summary: A woman escaped police custody while being arrested and travelled from Haryana to Pune in train. She was convicted for RS.4 crore cyber forgery.

Read More: கொடூரம்.! அரை நிர்வாணமாக்கப்பட்ட திருநங்கை.. IT ஊழியருக்கு நேர்ந்த பயங்கரம்.!

Advertisement
Next Article