For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பச்சை உடம்புனு பார்க்காமல் வாலிபர் செய்த காரியம்.. பசியில் கதறும் பச்சிளம் குழந்தை; நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்..

woman was killed for jewels
06:58 PM Dec 13, 2024 IST | Saranya
பச்சை உடம்புனு பார்க்காமல் வாலிபர் செய்த காரியம்   பசியில் கதறும் பச்சிளம் குழந்தை  நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புளியஞ்சோலையை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவருக்கு, ஜகுபர் நிஷா என்ற பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும், கடந்த 40 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வழக்கமாக பேன்சி ஸ்டோர் செல்லும் நிஷா, கைக் குழந்தை இருப்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென இவர்களின் வீட்டிலிருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டிற்க்குள் சென்று பார்த்துள்ளனர்.

Advertisement

அப்போது ஜகுபர் நிஷா, பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர். அவர உடனடியாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அனுமதித்த சிறிது நேரத்திலேயே நிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மைசூர் ரகுமான் உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர். மேலும், கொலை நடந்ததிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த முகமது அபு உஸ்மான் என்பவர் அந்த பகுதிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை கண்காணித்த உளவுத்துறை போலீசார், முகமது அபு உஸ்மானை விசாரணைக்காக அழைத்துச் சென்று. அவரது செல்போனை சோதனை செய்தனர்.

அப்போது, அவரது செல்போனில் உயிரிழந்த நிஷாவின் வீட்டில் இருந்த சில தடயங்கள் இருந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அவர் நிஷாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று மாலை, முஹம்மது அபு, நிஷா வீட்டு பக்கமாக சென்ற போது அவர் வீட்டில் தனியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உஸ்மான் வீட்டிற்குள் சென்று நிஷா அணிந்திருந்த கருகமணியை அறுத்துள்ளார். கருகமணி கீழே சிதறிய நிலையில், நிஷா கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன உஸ்மான், அவரது வாயை தனது கைகளால் பொத்தி, தான் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

ஓடும் பதற்றத்தில் அவர் தனது கையில் இருந்த கருகுமணி சிதறி உள்ளது. அந்த கருகுமணி தான் உஸ்மானை காட்டிக் கொடுத்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், தான் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை ஆற்றுப்பாலத்தில் வைத்துள்ளதாக உஸ்மான் கூறியதையடுத்து, போலீசார் உஸ்மானை அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தப்ப முயன்ற போது அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசர் கூறியுள்ளனர். இந்நிலையில், பச்சிளம் குழந்தை பசியால் துடித்துக் கொண்டிருக்க, ஒன்றரை வயது குழந்தையுடன் மனைவியை இழந்து நிற்கும் மைசூர் ரகுமான் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more: “நீ என் புருஷன் கூட உல்லாசமா இரு மா” 53 வயது கணவருக்காக, மனைவி செய்த காரியம்..

Tags :
Advertisement