முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மொபைல் பயனர்களுக்கு நவம்பர் 30க்கு பிறகு எந்த OTP மெசேஜும் வராதா..? TRAI சொன்ன பதில் இதுதான்..!

The Telecom Regulatory Authority of India (TRAI) recently issued a major order to telecom companies Airtel, Vodafone-Idea, and Reliance Jio.
04:13 PM Nov 29, 2024 IST | Rupa
Advertisement

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து வேலைகளுமே செல்போனிலேயே முடிந்துவிடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நம் வேலைகளை எளிதாக்கி இருந்தாலும் சைபர் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் OTP தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழக்கின்றனர்.

Advertisement

இந்த சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது.

புதிய விதிகளின்படி, மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க, OTPகள் உட்பட அனைத்து எஸ்.எம்.எஸ்களும் எங்கிருந்து வருகிறது என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். இதன் மூலம், மோசடி தொடர்புகளை தடுக்கலாம் என்றும்,  பயனர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

நவம்பர் 30-க்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பயனர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு OTPகளைப் பெற முடியாது அல்லது தாமதமான OTPகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் டிசம்பர் 1 முதல் மெசேஜ் டிரேசபிளிட்டி குறித்த TRAI காலக்கெடு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் இதுகுறித்து இந்த செய்திக்கு பதிலளித்த TRAI இந்த செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த அமைப்பு “ டிசம்பர் 1 முதல் பயனர்களுக்கு  OTP மெசேஜ் வராது என்பது உண்மையில் தவறான செய்தி. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எஸ்.எஸ்.எஸ் செய்தியைக் கண்டறியும் தன்மையை உறுதி செய்யக் கட்டளையிட்டுள்ளது. இது எந்தச் செய்தியையும் தாமதப்படுத்தாது." என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் TRAI எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி செய்வதை தடுக்க அந்த செய்தியை அனுப்பியவர்களை அணுகுவதற்கான உத்தரவுகளை வழங்கியது. சந்தேகத்திற்குரிய OTP களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று கூறப்பட்டிருந்தது. இதற்காக TRAI தொலைத் தொடர்பு நிறுவனங்களை செய்தி கண்டறியும் தன்மையை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

அனுப்பியவர்களிடமிருந்து பெறுபவர்களுக்கு வரும் அனைத்து செய்திகளின் தடமும் கண்டறியப்பட வேண்டும் என்று TRAI உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2024 என நிர்ணயிக்கப்பட்டது. வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்கெட்டர் சங்கிலியுடன் எந்த செய்தியும் நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

அதன்படி செப்டம்பர் 1 முதல், அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் URLகள், APKகள், OTT இணைப்புகள் அல்லது அனுப்புநரால் அனுமதிப் பட்டியலில் சேர்க்கப்படாத அழைப்பு எண்கள் ஆகியவற்றைக் கொண்ட செய்திகளை அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : அன்லிமிடெட் கால்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. 100 ரூபாய்க்குள் அசத்தல் திட்டங்களை வழங்கும் BSNL..

Tags :
airtelbsnlnew otp rulesOTPreliance jioTRAItrai new rulesvodafone
Advertisement
Next Article