முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மேல்முறையீடு செய்தவர்களுக்கு எப்போது ரூ.1,000 கிடைக்கும்..? வெளியான முக்கிய அப்டேட்..!!

07:37 AM Nov 12, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என சொல்லப்பட்டாலும், 14ஆம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 3 தவணைக்கான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், மகளிர் உரிமை தொகை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கிற வரை திராவிட மாடல் அரசின் பணி நிச்சயம் தொடரும். கடந்த மார்ச் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசும் போது, ஏறத்தாழ 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இத்திட்டம் அமையும் என்று நான் சொன்னேன்.

ஆனால் இன்றைக்கு 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. இத்திட்டத்திற்கு பொறுப்பேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களோடு இந்த திட்டத்தை இதனுடைய செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார், களத்திலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Tags :
பெண்கள்முதல்வர் மு.க.ஸ்டாலின்மேல்முறையீடு
Advertisement
Next Article