முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பைரவரை எந்தெந்த கிழமையில் எப்படியெல்லாம் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

09:33 PM Jan 23, 2024 IST | 1newsnationuser5
Advertisement

தமிழ் கடவுள்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். அவரது வாகனமாக நாய் இருப்பதால்தான் நாயை பலரும் பைரவர் என்று அழைக்கின்றனர். உக்ர பைரவர், கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் என்றெல்லாம் அவரை அழைக்கின்றனர். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபம் என்று கூறப்படுகிறது எனவே, சிவன் கோவில்களில் இந்த கால பைரவர் வடகிழக்குப் பகுதியில் நின்றவாறு காட்சியளிப்பதை காணமுடியும். பைரவரை ஒவ்வொரு மாதிரி வழிபடும் போதும் நமக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அது பற்றி தெரிந்து கொள்ளலாம். 

Advertisement

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் பைரவருக்கு வடமாலை அணிவித்து செய்தால் திருமண தடை விலகும். கடன் சுமையும் தீரும். அத்துடன் ஞாயிற்று கிழமையில் பைரவருக்கு புனுகு சாற்றி, முந்திரி மாலை அணிவித்தால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். இந்த வழிபாட்டை சிம்ம ராசிக்காரர்கள் செய்வது அவர்களுக்கான வாழ்வை தரும். திங்கள் கிழமை வில்வ இலையை வைத்து பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சிவனின் அருள் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி வருகின்ற நாளில் பைரவருக்கு சந்தன காப்பு அணிவித்து, புனுகு சாற்றி, பன்னீரால் அபிஷேகம் செய்தால் கண் பார்வை பிரச்சனைகள் நீங்கும். 

இந்த வழிபாட்டை கடக ராசிக்காரர்கள் மேற்கொள்வது அவர்களுக்கு சிறப்பான வாழ்வை தரும். செவ்வாய்க்கிழமையில், மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் மேஷ ராசிக்காரர்கள் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் செல்வ வளம் ஏற்படும். 

நிலம் சம்பந்தப்பட்ட லாபங்கள் கிடைக்க வேண்டுமெனில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி புதன்கிழமையில் வழிபடுவது பலன் கொடுக்கும். புதன்கிழமையில் கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இந்த பூஜையை மேற்கொள்வது அவர்களுக்கு நல்ல செல்வ வளத்தை ஏற்படுத்த உதவும். 

பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பைரவர் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வந்தால் விடுபட்டு விடலாம். மீனம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிகவும் உகந்த நாள். 

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலைகளைக் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் கிடைக்கச் செய்யும். துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த விஷயத்தை பின்பற்றுவது நல்ல பலன்களை அவர்களுக்கு கொடுக்கும். சனிக்கிழமையில் சனி பகவானின் குருவான பைரவரை வழிபடுவது சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட உதவும். கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இந்த நாட்களில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

Tags :
BairavarhinduLord bairavarsivan temple
Advertisement
Next Article