முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன’..? 18 வயதில் மிரட்டும் டிராவிட் மகன் சமித்..!!

04:55 PM Jan 13, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். வேகப்பந்துவீச்சாளரான இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கேற்றபடி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் பெரியளவில் செயல்பட்டதில்லை. மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கோவா அணிக்கு மாறினார்.

Advertisement

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக மற்றொரு வாரிசு களமிறங்கியுள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட் தொடரான யு18 கோச் பெகார் டிராபி தொடரில் களமிறங்கியுள்ளார். 18 வயதாகும் இவர், கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் 7 போட்டிகளில் ஆடியுள்ள சமித் டிராவிட் 3 அரைசதங்கள் உட்பட 370 ரன்களை விளாசியுள்ளார். பேட்டிங் மட்டுமின்றி, சமித் டிராவிட் நல்ல ஆல்ரவுண்டர் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், யு18 கோச் பெகார் டிராபியின் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கர்நாடகா அணி விளையாடியது. இந்த போட்டியில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதில், 19 ஓவர்களை வீசிய சமித் டிராவிட் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் விரைவில் சமித் டிராவிட் ஐபிஎல் தொடரில் நெட் பவுலராக இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ராகுல் டிராவிட் தனது மகனுக்கு பயிற்சியளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தன் மகனுக்கு பயிற்சியாளராக இருக்கும் போது தந்தை மற்றும் பயிற்சியாளர் என்று இரண்டு ரோலையும் செய்ய வேண்டிய நிலை வரும். அதனால் பயிற்சியளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Tags :
கிரிக்கெட்சமித் டிராவிட்யு18 கோச் பெகார் டிராபிராகுல் டிராவிட்
Advertisement
Next Article