’உடலுறவின் போது என்ன நடக்கும், எப்படி நடக்கும்..? முதல்வரை கேவலமாக திட்டும் பாஜக..!!
பீகார் சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பீகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2. 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. விரைவில் அது 2 சதவீதமாக குறையும் என்று தெரிவித்தார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு இளம் தலைமுறை பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு இருப்பதே காரணம். கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள் என்றார். (இதுபோன்று, பேசியபோது சில சைகைகளையும் அவர் காட்டினார்). இது அவையில் இருந்த பெண்களை முகம் சுழிக்க வைத்தது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் பேச்சு தரக்குறைவானதாக இருந்ததகாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்ததை அடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது. கேவலமாக பேசிய நிதிஷ்குமாரை ஆதரிக்கும் அவரின் கூட்டணி கட்சியினர் பதவிக்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை உணர்த்தியுள்ளது. நிதிஷ் குமார் இனி அரசியலில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.
உடலுறவின் போது என்ன நடக்கும், எப்படி நடக்கும், அதை பெண்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்று சைகைகளோடு நக்கலாக, சிரித்து கொண்டு பேசிய விவகாரத்தை கண்டிக்காத எந்த கட்சியும் அரசியலில் இருக்க தகுதியற்ற கட்சிகளாகவே கருதப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வெட்கி தலைகுனிய வேண்டிய விவகாரம் இது.
காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இனியும் அந்த கூட்டணியில் இருக்குமா? வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் இந்த விவகாரத்தில் வாய் அடைத்து போயுள்ளது ஏன்? ஒட்டு மொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி, மானபங்கப்படுத்திய நபரை கண்டிக்கத்தவர்கள் மக்கள் தலைவர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.