முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருமணத்திற்கு 10 பொருத்தங்கள் கட்டாயமா.? 10 பொருத்தங்களின் அர்த்தங்கள் என்ன தெரியுமா.!?

06:24 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் முதலில் ஜாதகத்தை தான் பொருத்தமாக பார்த்து வருவார்கள். ஜாதகத்தின் அடிப்படையில் 10 பொருத்தங்களில் 7க்கும் மேலான பொருத்தங்கள் பொருந்தி இருந்தால் மட்டுமே திருமணம் பேசி முடிக்கப்படும். இல்லையென்றால் வீட்டின் பெரியவர்கள் அடுத்த பொருத்தமான ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவை என்னென்ன பொருத்தங்கள் என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

1. தினப் பொருத்தம் -  ஆண் மற்றும் பெண் இருவரது நட்சத்திரமும் பொருந்துகிறதா ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பொருந்துகிறதா என்பதை பார்க்கும் பொருத்தம் தான் தின பொருத்தம். இது பொருத்தங்களில் முக்கியமானதாகும்.
2. குணபொருத்தம் -  இது தனக்கு கணவன் அல்லது மனைவியாக வரப்போகிறவர்கள் எப்படிப்பட்ட குணத்தை உடையவர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் பொருத்தமாகும்.
3. மகேந்திர பொருத்தம் - இது திருமணம் செய்ய போகும் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் கண்டிப்பாக பொருந்த வேண்டும். இந்த பொருத்தம் இல்லை என்றால் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இருக்காது என்று ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
4. ஸ்தீரி தீர்க்க பொருத்தம் - திருமணம் செய்யக்கூடிய ஆண் மற்றும் பெண் இருவரும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு இந்த பொருத்தம் முக்கியமானது.
5. யோனி பொருத்தம் - இது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவு எந்த அளவிற்கு நிலைத்து நிற்கும் என்பது குறித்து பார்க்கும் பொருத்தம் ஆகும். 10 பொருத்தங்களில் முக்கியமான பொருத்தமாக இது கருதப்படுகிறது.
6. ராசி பொருத்தம் - வம்சம் வாழையடி வாழையாக விருத்தியாக இந்த பொருத்தம் இருக்க வேண்டும்.
7 ராசி அதிபதி பொருத்தம் - கணவன் மனைவி இருவருக்கிடையில் எந்த அளவு சந்தோசம் இருக்கும் என்பதை குறித்து கூறும் பொருத்தமாகும்.
8. வசிய பொருத்தம் -  கணவன் மனைவிக்குள் திருமணத்திற்கு பின்பு காதல், ஈர்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை குறித்து கூறும் பொருத்தமாகும். இதுவும் முக்கியமான பொருத்தமாக கருதப்படுகிறது.
9. ரஜ்ஜு பொருத்தம் - கணவன் மற்றும் மனைவியின் ஆயுள் பாக்கியத்தை உறுதி செய்யும் பொருத்தமாக கருதப்படுகிறது. இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் கண்டிப்பாக நடைபெறாது.
10. வேதை பொருத்தம் - திருமணம் செய்ய போகும் ஆண் மற்றும் பெண் இருவரும் வாழ்வில் எந்த அளவிற்கு சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்பதை குறித்து கூறும் பொருத்தமாக இருந்து வருகிறது.

இந்த பத்து பொருத்தங்கள் முழுமையாக பொருந்தக்கூடிய நபர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். 10 பொருத்தங்களில் தின பொருத்தம், யோனி பொருத்தம், குணப் பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் போன்றவை முக்கியமான பொருத்தமாக கருதப்பட்டு வருகிறது. இந்த பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்திற்கு மனப்பொருத்தம் மிக முக்கியமானதாக ஜோதிடர்களும் கருதி வருகின்றனர். மனப்பொருத்தம் இல்லை என்றால் பத்து பொருத்தங்களும் பொருந்தி இருந்தாலுமே திருமணத்திற்கு அர்த்தம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

Tags :
astrologyCompatibilitymarriage
Advertisement
Next Article