முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எல்லையில் களைகட்டிய தீபாவளி!… சிஆர்பிஎப் வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகம்!

02:39 PM Nov 12, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், சில சிறிய பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Advertisement

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) 76-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பணியின் இடையே மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், சில சிறிய பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்பற்று பாடல்களுக்கு அவர்கள் நடனமும் ஆடினர். இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, தீபாவளி பண்டிகையை 76-வது பட்டாலியனை சேர்ந்த நாங்கள் பெரிய உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறோம்.

நாங்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்கலாம். ஆனால், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போன்று இருக்கிறோம் என கூறினார். அவர் பாதுகாப்பு பணியை பற்றி கூறும்போது, ஆண்டு முழுவதும் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுணர்வுடன் இருக்கிறோம். இந்த பண்டிகை காலத்தில், நாங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்றும் கூறினார்.

Tags :
CRPF soldiersdiwali celebrationஎல்லையில் களைகட்டிய தீபாவளிசிஆர்பிஎஃப் வீரர்கள் உற்சாகம்பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டம்மெழுகுவர்த்தி ஏந்தியும்
Advertisement
Next Article