என்னையா நடக்குது.? "ஸ்ரீராமர் புடிக்கும் பிஜேபி தான் பிடிக்காது.." கர்நாடக முதல்வரின் சர்ச்சை பேட்டி.!
கடந்த ஆண்டு நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுடன் வெற்றி பெற்று அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது. சித்தாராமையா கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார். ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
அதேபோல எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இந்த அழைப்பை நிராகரித்தது. ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நாடகம் எனவும் பிஜேபி தனது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக ராமர் கோவில் விழாவை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியது. இதற்கு பாரதிய ஜனதா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களை சனதான எதிரிகள் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தங்களது கட்சி ராமர் கோவில் அழைப்பிதழை புறக்கணித்தது சரிதான் என தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து பேசிய அவர் "நாங்கள் அனைவருமே ஸ்ரீராமரின் பக்தர்கள் தான். தினமும் அவரை வழிபட்டு வருகிறோம். மேலும் ராமர் கோவிலுக்கு எதிரானவர்களும் அல்ல. ஆனால் பாரதிய ஜனதா மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் ஸ்ரீராமரையும் ராமர் கோவிலையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருகிறது. அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்" என தெரிவித்திருக்கிறார்.