முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிபரை எப்போதும் மகிழ்விக்க கன்னிப்பெண்கள்.. விலை உயர்ந்த ஒயின்... இந்த சொகுசு ரயில் பற்றி தெரியுமா?

09:25 AM Dec 14, 2024 IST | Rupa
Advertisement

வடகொரிய அதிபரான கிம் ஜாங்-உன் விசித்திரமான பழக்கவழக்கங்களுக்கும், ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றவர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் அவரது தனிப்பட்ட ரயில், பெரும்பாலும் நகரும் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த ரயிலில் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் ஆடம்பர வசதிகள் நிறைந்துள்ளன.

Advertisement

சுவாரஸ்யமாக, இந்த ரயிலில் பணிப்பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. கிம்மின் இந்த சிறப்பு ரயிலில் பணிபுரிய இளம் பெண்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு பிரச்சாரங்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள்.

விமானத்தில் பறக்க பயம்

தனது தந்தை, கிம் ஜாங்-இல் மற்றும் தாத்தா கிம் இல்-சங் ஆகியோரை போலவே, கிம் ஜாங்-உன், விமானப் பயணத்தைத் தவிர்க்கிறார். அவரின் பறக்கும் பயமே இதற்கு காரணம். மாறாக, அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கு தனது அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரயிலையே நம்பியிருக்கிறார்.

இந்த ரயில், உயர் பாதுகாப்பு அம்சங்களுடன், ஊடுருவ முடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது "நகரும் கோட்டை" என்ற பெயரைப் பெற்றது.

ரயிலின் பணிப்பெண்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்?

கிம் ஜாங்-உன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார். விலையுயர்ந்த ஒயின்கள், இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகள் மற்றும் பிரத்தியேக சிகரெட் ஆகியவற்றை அவர் பயன்படுத்துகிறார். அதிகபட்ச வசதியை உறுதிப்படுத்தும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அவரது ரயில் ஆடம்பரத்தை பிரதிபலிக்கிறது.

அதிபரை மகிழ்விக்க பெண்கள் குழு

இந்த ரயிலின் பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்களின் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த படைப்பிரிவில் பயணிகளுக்கு சேவை செய்து மகிழ்விக்கும் பணிப்பெண்கள் உள்ளனர். இந்த பெண்கள் வட கொரியா முழுவதும் கடுமையான பிரச்சாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கன்னிப்பெண்கள் மட்டுமே இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.. மேலும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகளுக்கு பின்னரே இந்த பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பெண்களுக்கு 3,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. இது வட கொரிய தரத்தின்படி குறிப்பிடத்தக்க தொகையாகும்.

ரயிலின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ப்ளேஷர் பிரிகேட் என்று அழைக்கப்படும் இளம் பெண்களின் குழு. அழகான, வசீகரமான பெண்களே இந்த குழுவில் இடம்பெறுவார்கள்.

கிம் ஜாங் உன் இந்த ரயில் பயணம் செய்யும் போது அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே இந்த பெண்களின் முக்கியமான வேலை. எனினும் மேற்கத்திய ஊடகங்கள் இந்த பெண்களை "பாலியல் அடிமைகள்" என்று குறிப்பிடுகின்றன.

சோவியத் பரிசு

இந்த சொகுசு ரயில் முதலில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் கிம் குடும்பத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த ரயில் வட கொரியாவின் தலைவர்களின் முதன்மை போக்குவரத்து முறையாக இருந்து வருகிறது. வெளியில் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட இந்த ரயிலின் உட்புறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. பிளாட்-ஸ்கிரீன் மானிட்டர்களுடன் கூடிய விளக்க அறைகளையும் இந்த ரயில் கொண்டுள்ளது.

அதிநவீன வசதிகள், பாதுகாப்பு

ரஷ்ய இராஜதந்திரி கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கி, தனது ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் புத்தகத்தில், கிம் ஜாங்-இல் ரயிலின் தனது அனுபவங்கள் குறித்து விவரித்துள்ளது. பிரஞ்சு ஒயின்கள், இறால்கள் மற்றும் பன்றி இறைச்சி உட்பட பலவிதமான நேர்த்தியான உணவுகள் ரயிலில் பரிமாறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த ரயிலில் வட கொரிய அரச விவகாரங்கள் பல நடைபெறுகின்றன.

கிம் ஜாங்-உன்னின் ரயிலின் பாதுகாப்பு இணையற்றது. கனரக கவச முலாம் பூசப்பட்டதால் ரயில் 40-50 கிமீ/மணி (அதிகபட்சம் 60 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கிறது. மூன்று உயர்-பாதுகாப்பு ரயில்கள் அதனுடன் பயணிக்கின்றன. சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக, கிம்மின் ரயில் கடந்து செல்லும் வரை வழியில் மற்ற ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.

மேலும், ரயில் வருவதற்கு முன்பாக ஒவ்வொரு நிலையத்தையும் ஆய்வு செய்து பாதுகாப்பதற்காக சுமார் 100 பாதுகாப்பு முகவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக, விமானப் படையின் சரக்கு விமானங்கள் மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்கள் ரயிலின் பயணத்தின் போது உடன் செல்கின்றன.

90 பெட்டிகள் கொண்ட ரயில்

கிம்மின் சொகுசு மெர்சிடிஸ் கார்களை கொண்டு செல்வது உட்பட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. 90 பெட்டிகள் இந்த ரயிலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம்மின் தந்தையும் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : 18 ஆயிரம் இந்தியர்களை ‘நாடுகடத்த’ தயாராகிய டொனால்ட் டிரம்ப்!. பட்டியலை தயாரித்த அதிகாரிகள்!.

Tags :
division of pleasure squaddprk pleasure squadgirls from pleasure squadinside kim jong un’s secret billionaire partieskim il sung pleasure squadkim jong un pleasure squadkim jongun teenage pleasure squadkim jongun teenage pleasure squad shortsnorth korea pleasure squadnorth korea's pleasure squadpleasure brigadepleasure squadpleasure squad north koreasecret pleasure squad of kim jong unteenage pleasure squad
Advertisement
Next Article