முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முருகன் கோயில் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதி மனிதர்களின் குகைகளும், ஓவியங்களும் எங்கு தெரியுமா.?

07:22 AM Jan 19, 2024 IST | 1newsnationuser5
Advertisement

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. 350 படிகளை கொண்ட இக்கோயில் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய கரடு முரடான காட்டுப்பாதை வழியிலும் செல்லலாம்.

Advertisement

மற்றொன்று சமீபத்தில் அமைக்கப்பட்ட படிகள் மூலமாகவும் மலையின் மீது ஏறிச்சென்று முருகனை தரிசிக்கலாம். முருகப்பெருமான் பாலகராக இருக்கும்போது தன் அன்னையிடம் சண்டையிட்டு இந்த குன்றின் மீது தான் ஏறி அமர்ந்து கொண்டார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் வற்றாத கிணறு ஒன்று இந்த குன்றின் அருகில் காணப்படுகிறது.

அந்த கிணறில் இருந்து தான் நீர் எடுத்து விசேஷ நாட்களில் சாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கிணற்று நீரை தீர்த்தமாகவும் தருகின்றனர். இதன் மூலம் நோய்கள் தீரும் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இந்த குன்றிலிருந்து 100 மீட்டர் தூரம் கீழே இறங்கி வந்தால் ஆதி மனிதர்களின் குகைகளை காணலாம்.

மேலும் இந்தக் கோயில்களில் ஆதி மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தார்கள் என்பதும், அவர்கள் வரைந்த ஓவியத்தையும் பார்த்து மெய்சிலிர்க்கிறது.  வெள்ளை நிறத்தில் பாறையின் மேல் வரைந்துள்ள ஓவியத்தில் யானையை கட்டுப்படுத்துவது போலவும், யானையின் மேல் உட்கார்ந்து சவாரி செய்வது போலவும் வரைந்து உள்ளனர். யானைக்கு பயிற்சி அளிக்கும் இடமாகவும், யானை சந்தை இடமாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

Tags :
cavetempleviral
Advertisement
Next Article