தென்காசி, திருநெல்வேலியில் வரலாறு காணாத மழை..!! - வெதர்மேன் அலர்ட்
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்து.
இதனையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சந்தேகத்திற்கு இடமின்றி, நீண்ட காலமாக தமிழகத்திற்கு பருவமழை மிகக் கடுமையான நாள். கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. ஒரு மாவட்டத்தை குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலைல ஊத்து - 500 மிமீ, மயிலாடுதுறை-கடலூர் பெல்ட்டில் 300 மி.மீ., தூத்துக்குடி கோவில்பட்டி 350+ மி.மீ, குற்றாலம் வரலாற்று சிறப்புமிக்க ஓட்டங்களை கண்டது.
ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல்லில் கனமழை பெய்தது. பெரம்பலூர்-அரியலூர் இடையே பரவலாக மழை பெய்தது. மற்றொரு பதிவில் திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் மழை நிற்கவே இல்லை. இந்தப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை மலைப்பகுதியில் வரலாற்று மழையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Read more ; நீதிபதிகள் ஃபேஸ்புக்கில் இருக்கக்கூடாது!. துறவிகள் போல் வாழவேண்டும்!. உச்சநீதிமன்றம்!