முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழக அரசு வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1,000 ஊக்கத் தொகை...!

06:10 AM Feb 01, 2024 IST | 1newsnationuser2
Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 71 கல்லூரிகளில் பயிலும் 2499 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறும் மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை வாழ்த்து மடலாக ஒவ்வொரு மாணவிகளுக்கும் அனுப்பிட ஏதுவாக முதல்வர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 71 கல்லூரிகளில் பயிலும் 2499 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி வரப்பெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், பணிபுரியும் மகளிருக்குத் தங்கும் விடுதி, உறைவிடம் மற்றும் ஆதரவு தேவைப்படும் பெண்களுக்கு சேவை இல்லங்கள், பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என்று வாக்களித்திருந்தேன். அதனடிப்படையில் கற்ற பெண்களால் மட்டுமே முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தை உருவாக்கிட இயலும் என்பதை செயல்படுத்தும் விதமாக என் உள்ளத்தில் உதித்த உன்னத திட்டமே "புதுமைப் பெண்" திட்டமாகும்.

பல்வேறு குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக உங்களின் உயர்கல்வி தடைபடக் கூடாது என்பதுடன், கல்விக் கட்டணம், போக்குவரத்து, நல்ல உணவு மற்றும் கல்லூரி படிப்பிற்கான அனைத்து தேவைகளுக்கும் துணைபுரியும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத் தொகை உங்களது வங்கக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஏற்கனவே வேறு கல்வி உதவித்தொகையோ, பிற சலுகைகளோ பெறுபவராயினும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
1000 rsmk stalintn governmentWomens
Advertisement
Next Article