நோட்...! UGC நெட் தேர்வு ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...!
தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு நெட் ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு, வருகிற ஜூன் மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. அதேநாளில், யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. யுஜிசி-நெட் இப்போது ஜூன் 18 ஆம் தேதி நடத்தப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார். தேர்வர்களின் கோரிக்கை அடிப்படையில் பெறப்பட்ட கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
யுஜிசி-நெட் தேர்வு, ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், உதவிப் பேராசிரியராக நியமனம், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிஎச்டி படிப்புகளுக்கான சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதியைத் தீர்மானிக்க நடத்தப்படுகிறது. NTA யு.ஜி.சி நெட் தேர்வு OMR முறையில் 83 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ugcnet.nta.ac.in மற்றும் nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.