"உங்களை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும்" -வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்...
திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியதற்கு கங்கை அமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இசையமைப்பாள இளையராஜாவை பாடல்கள் காப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் தான் அனைவருக்கும் மேலானவன் எனக் கறுத்தது தெரிவித்திருந்த இளையராஜா, பின்னர் பாடல்களில் தனது உரிமை தான் மேலானது என கூறியதாக விளக்கம் கூறியிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'படிக்காத பக்கங்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசியபோது, "இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு, இதைப் புரிந்துகொண்டவன் ஞானி,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி”, என பேசினார். இது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு இளையராஜிவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போலப் பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் கர்வம் தலைக் கேரிவிட்டது, அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார்.
வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை.
தன்னை தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்? நான் தான், நான் மட்டும் தான் என இருக்கிறார். இளையராஜா குறித்து சின்ன குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்”, என கூறியுள்ளார்.
Read More: நடிகர் விஜயின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..! வெளியான புகைப்படம்…!