உங்கள் முகத்தின் கருமை மாறி, கலரா இருக்கணுமா? அப்போ இந்த சீரம் போடுங்க..
தற்போது உள்ள காலகட்டத்தில், வெயில், தூசு போன்ற பல காரணங்களால் முகத்தில் பரு, கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் முக அழகே போய்விடும். ஆனால், அனைத்து பெண்களும் தங்கள் முகம் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கத்தான் விரும்புகிறார்கள்.
குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக பல லோஷன்ஸ், கிரீம்ஸ், மேக் அப் பயன்படுத்தி தங்களை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில நாட்களில், அவை சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தி அழகையும், சருமத்தையும் கெடுத்து விடும். இதனால் எப்போதும் இயற்கையான முறையில் அழகை பராமரிப்பு மிகவும் சிறந்தது.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் ஜொலிக்க இந்த ஒரு சீரம் போதும். இந்த சீரமை நீங்கள் காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, நீங்கள் இந்த சீரமை வீட்டிலேயே தயாரித்து வைத்து கொள்ளலாம்.
இந்த சீரம் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றவும். பின் அதனுடன் சிறிதளவு கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இப்போது உங்கள் சீரம் ரெடி. இந்த சீரமை, நீங்கள் இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.
Read more: ஏலக்காய் நீர் குடித்தால் கேன்சர் வராதா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..