முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Bank Holiday: நாளை அனைத்து வங்கிகளும் விடுமுறை...! RBI அதிரடி உத்தரவு...!

06:10 AM Apr 18, 2024 IST | Vignesh
Advertisement

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ விடுமுறை அறிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், 2வது கட்டம் ஏப்ரல் 26ம் தேதியும், 3வது கட்டம் மே 7ம் தேதியும், நான்காவது கட்டம் மே 13ம் தேதியும், ஐந்தாவது கட்டம் மே 20ம் தேதியும், 6வது கட்டம் மே 25ம் தேதியும், ஏழாவது கட்டம் ஜூன் மாதம் என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் நாளில் அனைத்து வங்கிகளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: தமிழ்நாடு (39 இடங்கள்), உத்தரகாண்ட் (5 இடங்கள்), அருணாச்சல பிரதேசம் (2 இடங்கள்), மணிப்பூர் (2 இடங்கள்), மேகாலயா (2 இடங்கள்), மிசோரம் (1 இடம்), நாகாலாந்து (1 இடம்), சிக்கிம் (1 இடம்), லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள். சென்னை, டேராடூன், இட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, நாக்பூர் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 19-ம் தேதி மூடப்பட்டிருக்கும்.

39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement
Next Article