TN BUDGET 2024: அகழ்வாராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு.! தமிழக பட்ஜெட்டில் சாதனை.!
2024-25 ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் (TN Budget) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த போது, பி.டி .ஆர் தியாகராஜன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்து வந்த நிலையில் 2023-24 பட்ஜெட்டிற்கு பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தங்கம் தென்னரசு தமிழக அரசின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இவர் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் . இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு வகையான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி, விளையாட்டு, பெண்கள் நலம், வேலை வாய்ப்பு என அனைத்து துறைகளுக்கும் சிறப்பான ஒரு பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்து வருகிறது.
தமிழகம் முழுவதிலும் உள்ள கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மத்திய தேர்வாளர் பணிகளுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு 6 மாத காலம் இலவச உணவு மற்றும் தங்கும் இடத்துடன் கூடிய இலவச பயிற்சி வழங்குவதற்கு, புதிய மையம் அமைக்கப்பட இருக்கிறது. பழங்குடி மொழிகளை ஆவணப்படுத்துவதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கீழடி உட்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை அறிவதற்கு 5 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அகழ்வாராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறுகிறது.
English Summary: Tamilnadu govt allocates 5 crores for archeology researches on 8 places including keeladi and became the first state in india to do so