பெரும் சோகம்...! தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து... பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...!
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேற்று மாலை நாமக்கல் மாவட்டம் மெட்டாலா அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் ரவி (45), மற்றும் அலமேலு, (64) என அடையாளம் காணப்பட்டனர். மூன்றாவது நபர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இரவு 8.45 மணியளவில் ராசிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சில் இருந்த 17 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் பார்வையிட்டார்.
இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார். இரண்டு பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்டார்.