முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’என்னுடைய கட்சியில் லோகேஷுக்கு இந்த பதவி தான்’..!! ஓபனாக பேசிய நடிகர் விஜய்..!!

11:38 AM Nov 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நடிகர் விஜய்யின் மனம் கவர்ந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷின் கெரியர் மளமளவென உயர முக்கிய காரணமாக அமைந்த படம் மாஸ்டர் தான். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் அவருக்கு விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரம், லியோ என அடுத்தடுத்து இரண்டு மாஸ் ஹிட் படத்தை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக வளர்ந்துள்ளார் லோகேஷ்.

Advertisement

தொடர்ந்து 5 வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலையில், விரைவில் தொடங்க உள்ள லோகேஷ், அதன் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளை அடுத்த 6 மாதத்திற்குள் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளார்.

இதற்கிடையே, லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி நடிகர் விஜய் பேசுகையில், ”லோகேஷை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும், மாநகரம் மூலம் நம்மள பாக்க வச்ச அவர், கைதி மூலம் எல்லாரையும் பாக்க வச்சு, மாஸ்டர், விக்ரம் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வச்சு, இப்போ லியோவில் இன்னும் ஹாலிவுட் தான் பாக்கினு நினைக்குறேன். உன்னை நினைக்கும் போது பெருமையா இருக்கு லோகி” என கூறினார்.

அப்போது அங்கிருந்த தொகுப்பாளர்கள், லோகேஷ் 10 படம் பண்ணி முடிச்சத்துக்கப்புறம் சினிமாவில் இருந்து விலகி உங்க அரசியல் கட்சியில் சேர வந்தா அவருக்கு என்ன பதவி கொடுப்பீங்க என விஜய்யிடம், கர்ப்பனையா ஒரு கேள்வி கேட்டனர். இதற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவை லோகேஷுக்கு வழங்குவேன் என விஜய் சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

Tags :
அரசியல்தமிழ் சினிமாநடிகர் விஜய்லியோ வெற்றி விழாலோகேஷ் கனகராஜ்
Advertisement
Next Article