For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

EPS: இது தமிழ்நாடா..? இல்ல போதை பொருள் மொத்த விற்பனை கிடங்கா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

05:50 AM Mar 02, 2024 IST | 1newsnationuser2
eps  இது தமிழ்நாடா    இல்ல போதை பொருள் மொத்த விற்பனை கிடங்கா    எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
Advertisement

நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா..? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் நேற்று இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது. ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன.

Advertisement

நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்தவிற்பனைக் கிடங்கா..? முதல்வர் ஸ்டாலின் விழிதெழுந்து , தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுங்கள். இனி தமிழ்நாட்டில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை. காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Advertisement