பணம் கையில் வந்த வேகத்தில் செலவாகிடுதா.! இந்த சிறு சிறு தவறுகளை இனி செய்யாதீங்க.!?
நம் அடிப்படை தேவைகளை செய்து கொள்வதற்கு கூட பணம் ரொம்ப முக்கியமானதாக இருந்து வருகிறது. பணம் இருந்தால் உலகத்தில் எதை வேண்டுமானாலும் விரும்பியதை செய்யலாம். பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தின் தேவையை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
பணம் வந்தவுடன் நாம் செய்யும் சில தவறுகள் பணம் கையில் தங்காமல் சீக்கிரம் செலவாகிவிடும். அவ்வாறு நாம் செய்யும் தவறுகள் என்ன என்பது குறித்தும் பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்?
1. மாதந்தோறும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கையில் வந்தவுடன் செலவு செய்யாமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். மனதில் கடவுளை நினைத்து வழிபட்டு பின்பு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
2. பொதுவாக பணத்தை கற்பூரம் மற்றும் மலர்கள் போன்ற வாசனைப் பொருட்கள் நிறைந்த இடத்தில் வைக்கலாம். இவ்வாறு செய்வது பணத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை கடன் ஆகும்.
3. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது இடது கையாலோ அல்லது விளக்கு வைத்த பின்போ கொடுக்கக் கூடாது. இது பணம் வாங்குபவருக்கும், பெறுபவர்க்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
4. பணத்தினை கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது. மேலும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பணத்தினை கொடுக்கவும் வாங்கவும் கூடாது.