முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகாராஷ்டிராவில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு இந்த 5 விஷயங்கள் தான் காரணம்..!! அதில் ஒருநாளும் தவறியதே இல்லை..!!

Such freebies are also said to be a major reason for the BJP's victory in the Maharashtra elections.
04:54 PM Nov 23, 2024 IST | Chella
Advertisement

என்னதான் தமிழ்நட்டில் கொடுக்கப்படும் நலத்திட்ட உதவிகளையும், இலவசங்களையும் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், தேர்தலின்போது இலவசங்களை வாரி வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்குவதற்கு ஒரு நாளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தவறுவதில்லை. மகாராஷ்டிர தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்கு அப்படியான இலவசங்களும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

Advertisement

அந்த வகையில், மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பாராத பெரும் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும் 5 விஷயங்களை, இங்கே பார்க்கலாம்

* மகளிர் உதவித்தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 1,500 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகள் கோரிக்கையை மஹாயூதி கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது, வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது, அதிக ஈரப்பதமுள்ள சோயாபீன் கொள்முதலுக்கு அனுமதி மற்றும் பருத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியது ஆகியவை கைகொடுத்துள்ளன.

* ஆர்.எஸ்.எஸ். (RSS) முழுவீச்சாக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியது உதவியுள்ளது.

* ஒற்றுமையாக இருந்தால் பத்திரமாக இருப்போம் என மறைமுகமாக பிரதமர் மோடி "ஹிந்துத்வா" பிரசாரம் செய்தது இந்த தேர்தல் வெற்றிக்கு உதவியுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஒற்றுமையாக இல்லாவிட்டால் பாதிக்கப்படுவோம்” என பிரச்சாரம் செய்ததும் வெற்றிக்கு உதவியுள்ளது.

* முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரவு-பகல் பாராமல் களப்பணிகளில் ஈடுபட்டதும் இந்த தேர்தலின் வெற்றிக்கு உதவியுள்ளது.

Read More : பாஜகவின் மொத்த பிளானும் வேஸ்ட்..!! ஜார்க்கண்டில் 3-வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் ஹேமந்த் சோரன்..!!

    Tags :
    பாஜகபிரதமர் மோடிமகாராஷ்டிர மாநிலம்
    Advertisement
    Next Article