இந்த நூற்றாண்டில் உலகம் நின்றுவிடும், குழந்தைகள் பிறக்காது?… ஆய்வில் பகீர்!
2100 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது
பிரான்சில் பிறப்பு விகிதம் மிக வேகமாக குறைந்து வருகிறது. 6.39 பிறப்பு விகிதத்தைக் கொண்ட பிரான்ஸ், அது அழிவின் விளிம்பில் இருக்கக்கூடும் என்று கவலை அதிகரித்துள்ளது. சமீபத்தில், பிரான்சின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம் 2023-ல் நாட்டில் ஏழரை லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் ஐரோப்பிய யூனியனின் பல நாடுகளின் நிலைமை இதை விட மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பியூ ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, 2100 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 11 பில்லியனை எட்டும். இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு வேகமாக பிறப்பு விகிதம் குறையும். அப்போது பிறப்பு விகிதம் 0.1 சதவீதமாக இருக்கும். அதே சமயம், பிறப்பு விகிதம் குறைவதை நிறுத்தக்கூடிய சூழ்நிலையும் இருக்கலாம்.