For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அந்த காலத்திலேயே கோடிகளில் சம்பளம்.. ஆடவரோடு ஜோடி சேர்ந்து நடிக்காத ஒரே நடிகை..!! யார் இந்த கே. பி. சுந்தராம்பாள்..?

The only actress who did not act with a man..!! Who is this K.P Sundarampal..?
10:01 AM Dec 19, 2024 IST | Mari Thangam
அந்த காலத்திலேயே கோடிகளில் சம்பளம்   ஆடவரோடு ஜோடி சேர்ந்து நடிக்காத ஒரே நடிகை     யார் இந்த கே  பி  சுந்தராம்பாள்
Advertisement

1934 ஆம் ஆண்டிலேயே  9 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கிய ஒரு நடிகை இருந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அவர்தான் கே. பி. சுந்தராம்பாள். தமிழ் சினிமாவில் பேசும் படம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வந்த திரைப்படம் தான் பக்த நந்தனார். இந்தப் படத்தில் கே பி சுந்தராம்பாள் நந்தனராக ஆண் வேடமிட்டு நடித்தார். கிட்டத்தட்ட 41 பாடல்கள் இடம் பெற்ற இத்திரைப்படத்தில் 19 பாடல்களை இவரே பாடியிருப்பார்.

Advertisement

ஈரோடு அருகே கொடுமுடி சொந்த ஊர். சிறுமியாக இருந்த போது, ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்றார். அப்படிச் சென்ற போது ஒருநாள்... அங்கே, கோயிலில் சிலர், பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சிறுமி சுந்தராம்பாளுக்கும் பாடத் தோன்றியது. அங்கேயே... அப்போதே பாடினார். அந்தக் குரல், கோயிலின் பிரமாண்ட மதிலில் பட்டுத் தெறித்து எதிரொலித்தது.

கோயிலில் இருந்தவர்கள்,கோயிலுக்கு வெளியே இருந்தவர்கள் என எல்லோரும் சிறுமி சுந்தராம்பாளை நோக்கி ஓடிவந்தார்கள். சூழ்ந்துகொண்டார்கள். வெளியே இருந்து வந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்து, ‘யார் பாடினது யார் பாடினது?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ’ஒரு சிறுமியின் குரலா இப்படி கணீர்னு இருக்கு’ என்று வியந்தார்கள். பாராட்டினார்கள்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனித்துவமான குரல் வளத்தால் காண்போரை வியக்க வைக்கும் இவர், நல்லதங்காள், வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற பல்வேறு நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அன்றைய காலகட்டத்தில் அவர் வாங்கிய ஒரு லட்சம் என்பது இன்று 9 கோடி முதல் 25 கோடி வரை மதிப்புடையதாக சொல்லப்படுகிறது

கே பி சுந்தராம்பாளை  பக்தர்களிடம் மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றது திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா" என்ற பாடல் தான். தன்னுடைய 25ஆவது வயதிலேயே கணவரை பறிகொடுத்த கே பி சுந்தராம்பாள், அதற்குப் பின் எந்த ஆடவரோடும் சேர்ந்து ஜோடியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல், கடைசி வரை துணை இல்லாமல் தனித்துவமான கதாபாத்திரங்களிலே  நடித்து வந்தார்.

கந்தன் கருணை என்ற படத்தில் அவ்வையார் வேடமிட்டு நடித்திருப்பார் கே பி சுந்தராம்பாள். அன்றைய காலகட்டங்களில் ஔவையாரினை  நன்கு அறியாதவர்கள்  கே பி சுந்தராம்பாள் தான் உண்மையான ஔவையார் என்று புரிந்து கொண்டதும் உண்டு. தன்னுடைய தனித்துவமான குரலாலும் நடிப்பாலும் மிகச் சிறப்பாக நடித்த கே பி சுந்தராம்பாள்  தமிழ் சினிமாவில் 12 படங்கள் மட்டுமே நடித்தார். இந்த 12 படங்களிலும் அதிகமாக இடம் பெற்றவை பக்தி படங்களே. பக்தி பாடல்களில் தனித்து நிற்கும் குரலாக கே பி சுந்தராம்பாளின் குரல் இன்னும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது!

Read more ; குழந்தைகளை தாக்கும் கவாசாகி நோய்.. ஆரம்ப கால அறிகுறிகள் என்னென்ன..?

Tags :
Advertisement