முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய பிரபலம்.. 2 தேசிய விருதுகளை வென்றது!

03:03 PM May 01, 2024 IST | Mari Thangam
Advertisement

படத்தில் ஒரு காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக 17 முறை முன்னணி நடிகர் ஒருவர் கன்னத்தில் அடி வாங்கினார். இந்த திரைப்படம் 2 தேசிய விருதுகளை பெற்றதுடன், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisement

அந்த நடிகர் வேறு யாருமல்ல பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் தான். இவரும் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான பரிந்தா என்ற படத்தில் அண்ணன் தம்பிகளாக நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது. மேலும் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் காட்சி ஒன்றில் அனில் கபூரை நடிகர் ஜாக்கி ஷெராப் கன்னத்தில் அறைய வேண்டுமாம். இந்த சீனில் முதல் ஷாட்டிலேயே இயக்குனர் ஓகே என்று கூறிவிட்டார். ஆனால் அனில் கபூருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அந்த காட்சியை மட்டும் திரும்ப திரும்ப எடுக்க சொல்லி கிட்டத்தட்ட 17 முறை அவர் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார்.

அதன் பின்னரே அனில் கபூர் திருப்தி அடைந்துள்ளார். இயக்குனரே அந்த காட்சி ஓகே என்று கூறியும் ஒரு நடிகரான அனில் கபூர் தனக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் ஒரே காட்சியை எடுத்து திருப்தி அளிக்கும் வரை நடித்துள்ளது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அவரின் அர்ப்பணிப்பை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

Tags :
anil kapoorbollywoodcinema update
Advertisement
Next Article