For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவே கண்கலங்கிய அந்த தருணம்!… பழி தீர்க்குமா?… இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்!

06:25 AM Nov 15, 2023 IST | 1newsnationuser3
இந்தியாவே கண்கலங்கிய அந்த தருணம் … பழி தீர்க்குமா … இந்தியா   நியூசிலாந்து இன்று மோதல்
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும் தோற்காமல் 9 ஆட்டங்களிலும் வென்று இந்தியா 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளள இந்தியா 8-வது முறையாக அரைஇறுதியில் விளையாடுகிறது. 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. இதுவரை 3 முறை இந்தியா இறுதி போட்டிக்கு சென்ற நிலையில், 1983, 2011ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றது. ஆனால் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. எனவே இந்த முறை நியூசிலாந்தை வென்று முன்னேறும் வேட்கையில் இந்தியா உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று வெளியேறி நிலையில், அதற்கு இன்று இந்தியா பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி உள்ளதால் இந்தியா பெரும் நம்பிக்கையில் உள்ளது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியாவை அரையிறுதியில் இன்று எதிர்கொள்கிறது. தற்போது இந்திய அணியில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சர்துல் தாக்கூர், சுழற்பந்து வீச்சுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் என இருவர் இருக்கிறார்கள். மேலும் கூடுதல் பேட்ஸ்மேன் ஆக இஷான் கிஷான் இருக்கிறான். கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார்.

மேலும் மும்பை ஆடுகளம் செம்மண் ஆடுகளம். இது வேகப்பந்துவீச்சுக்கு உதவி செய்யக்கூடும். இப்படியான காரணங்களால் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவது கடினம். மேலும் வேகப்பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டால் ஏற்கனவே விளையாடும் அணியில் இருப்பவர்கள் மற்றும் பிரசித் கிருஷ்ணா என வேகங்கள் இருக்கிறது. எனவே சிறிய மைதானமான மும்பையில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவது கடினம்.

மேலும் வெளியில் இருக்கக்கூடிய கூடுதல் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களான இஷான் கிஷான் மற்றும் பிரசித் கிருஷ்ணா, ஏற்கனவே விளையாடும் அணியில் யாராவது காயமடைந்தால் மட்டுமே இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இப்படியான காரணங்களால் கடைசியாக 5 போட்டிகளில் எந்த இந்திய அணி களம் இறக்கப்பட்டதோ அதே அணிதான் களம் இறங்கும். இதில் எந்தவித மாற்றங்களையும் செய்ய மாட்டார்கள் என்பதுதான் உறுதியான விஷயம்.

முதல் அரையிறுதிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, கில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

Tags :
Advertisement