தென்காசி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர்
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு அதிகமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை(14.12.2024) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். மேலும் எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Read more ; வாக்கிங் போனது ஒரு குத்தமா?? மனைவி தனியாக வாக்கிங் சென்றதால், கணவன் செய்த காரியம்..