வந்தது உத்தரவு...! தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நியமனம் வேண்டும்...!
06:30 AM Jan 27, 2024 IST | 1newsnationuser2
Advertisement
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை மே மாதம் 1-ம் தேதிக்குள் கண்டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மே மாதம் 31-ம் தேதிக்குள் பணி நிரவல் செய்ய வேண்டும். அதே போல் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து வரும் ஜூலை 1-ம் தேதிக்குள் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை மதிப்பீடு செய்து, அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்களை ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Advertisement
- அவ்வாறு அனுப்பப்படும் கருத்துருக்கள் மீது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படுவதோடு, பணிநியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியக்குழு மற்றும் அதன் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிப்புகளை வெளியிடவேண்டும். வெளியிடப்படும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வெளியிட்டு, மே மாதம் 1-ம் தேதியில் இருந்து மே 31-ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதி பட்டியல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.