முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குளிர் காலத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம்.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்கள்.!?

06:54 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
Advertisement

குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்ணலாம். ஆனால் குளிர் காலத்தில் சாதாரண சளி, காய்ச்சலை தாண்டி நுரையீரல், இதயம் என பாதிப்பு அதிகமானால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். மேலும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் மாரடைப்பா இல்லையா என்பதைக் குறித்து அறியலாம் என்று இதய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

குளிர்காலங்களில் நம் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், சுவாச பாதையில் அதிக சளி உருவாகி மூச்சு அடைப்பு ஏற்படுதல், இதயம் செயலிழந்து போகுதல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் நம் உடலுக்கு தேவையான உடற்பயிற்சியும், வெப்பநிலையும் கிடைக்காமல் போவது தான் முக்கிய காரணம்.

குறிப்பாக இதயத்தை பொறுத்தவரை நம் உடலில் பல்வேறு உறுப்புகளுக்கும் ரத்தத்தை அனுப்பும் வேலையை செய்து வருகிறது. இதயம் ரத்தத்தை உள்ளே இழுத்து வெளியே அனுப்பும் போது இரத்த நாளங்கள் உறைந்து இருப்பது மற்றும் சரிவர இயங்காமல் இருப்பதால் அதிக அழுத்தத்தை போட்டு இதயம் ரத்தத்தை வெளியே அனுப்ப முயற்சி செய்யும். இவ்வாறு முயற்சி செய்யும் போது தான் நம் இதயம் வேகமாக துடித்து மாரடைப்பு ஏற்படுகிறது என்று இதய நிபுண மருத்துவர் தீபேஷ் வெங்கடேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இதற்கான அறிகுறிகளாக சாதாரண நேரத்தில் மூச்சு விட சிரமப்படுதல், திடீரென்று கை மற்றும் கால் பகுதியில் அளவுக்கதிகமான வலி, முதுகு மற்றும் கழுத்து பகுதியில் சேர்ந்தவாறு வலி எடுப்பது, அதிகமான படபடப்பு, வியர்வை போன்றவை முக்கியமான அறிகுறிகளாக கருதப்பட்டு வருகிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை சென்று சந்திக்க வேண்டும்.

Tags :
doctorsheart atacksymptoms
Advertisement
Next Article