கரையை நெருங்கும் புயல்... பொதுமக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்...! தமிழக அரசு அட்வைஸ்
புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும்.
புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை. பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.