முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்னும் ரூ.2000 நோட்டுகள் இருக்கா?… ஆர்பிஐ அலுவலங்களுக்கு அனுப்புவது எப்படி?

09:25 AM Nov 04, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கதில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அதேசமயம், அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு மே மாதத்தில், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று அறிவித்தது.

Advertisement

மேலும் 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தங்கள் கையில் உள்ள 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. இருப்பினும் பின்னர் கால அவகாசத்தை மேலும் 7 நாட்கள் நீடித்தது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை, 2000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக்கு திரும்பி விட்டது. கடந்த அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகு 2000 நோட்டுகளை வங்கிகள் வாங்கவில்லை. அதேசமயம் கடந்த மாதம் 9ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ தனிநபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் மக்களுக்கு சில சிரமங்கள் உள்ளன.

தற்போது மக்கள் போஸ்ட் ஆபிஸ் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பி, அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் ரோஹித் பி தாஸ் கூறுகையில், தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் தங்களது கணக்கில் நேரடியாக வரவு வைக்க, வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை insured post மூலம் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்ப ஊக்குவிக்கிறோம். இது குறிப்பிட்ட கிளைகளுக்கு சென்று வரிசையில் நிற்கும் சிரமத்திலிருந்து அவர்களை காப்பாற்றும் என்று தெரிவித்தார்.

போஸ்ட் ஆபிஸ் அலுவலகம் வாயிலாக ஒருவர் 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால், அவர்கள் சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை இணைத்து கையொப்பமிட்டு போஸ்ட் ஆபிஸில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ., பான் கார்டு, அரசு துறை வழங்கிய அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்கிய அட்டை போன்றவற்றை ஆவணமாக பயன்படுத்தலாம். செல்லுபடியாகும் ஆவணங்களின் நகல், வங்கி கணக்கு அறிக்கையின் நகல் அல்லது பாஸ்புக்கின் முதல் பக்கம் நகலை இணைக்க வேண்டும்.

வங்கி கணக்கு விவரங்கள் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கணக்கு எண், கணக்கு வகை, வங்கி பெயர், கிளை பெயர், முகவரி, IFSC Code. நீங்கள் வழங்கிய கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் அல்லது கணக்கு முழுமையாக கே.ஒய்.சி. இணங்கவில்லை என்றால் இந்திய ரிசர்வ் வங்கி பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tags :
Still have Rs.2000 notes?ஆர்பிஐ அலுவலங்களுக்கு அனுப்புவது எப்படி?ரூ.2000 நோட்டுகள்
Advertisement
Next Article