cancer-க்கு மருந்தாகும் மசாலா பொருட்கள்!… உலக அரங்கில் எகிறும் எதிர்பார்ப்பு!… 2028க்குள் அறிமுகம்..!
cancer: புற்றுநோய்களுக்கு மருந்தை இந்திய மசாலா பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது.
உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்து, இன்று புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இந்தியாவில் இருக்கின்றனவா என்று ஐயப்படும்படியான நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும் என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோயிருக்கிறது.
''உணவே மருந்து’ என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்பரிய இந்திய மசாலா பொருட்களான மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு, சீரகம், லவங்கம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, புற்றுநோயைத் தடுத்து, குணப்படுத்தக்கூடிய ஆற்றல்கொண்டவை' இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள். 7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.
இந்தநிலையில், புற்றுநோய்களுக்கு மருந்தை இந்திய மசாலா பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. வரும் 2028ல் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்யும் வகையில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கி விரைவுப்படுத்தப்பட உள்ளது. பல்வேறு மசாலா பொருட்களில் இருந்து பெறப்பட்ட நானோ மருந்துகள் நுரையீரல், மார்பகம், பெருங்குடல், கர்ப்பப்பை, வாய், தைராய்டு செல்களில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்து செயல்படும் தன்மையை கொண்டுள்ளன என்பது ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த நானோ மருந்துகளை விலங்குகளின் உடலில் செலுத்தி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றி பெற்றது. இதையடுத்து தான் தற்போது மனிதர்களின் புற்றுநோயை குணமாக்கும் மருந்து தொடர்பான மருத்துவ பரிசோதனையை சென்னை ஐஐடி தொடங்க உள்ளது.
English Summary: IIT Chennai is involved in research to find cure for cancer from Indian spices.
Readmore: சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை குணப்படுத்தும் அதலைக்காய்.!? இவ்வளவு நன்மைகளா.?