முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கெட்ட நேரத்தை மாற்றும் அதிசய திருக்கோயில்.! எங்கு அமைந்துள்ளது தெரியுமா.?!

08:23 PM Jan 18, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக நம் வாழ்வில் நடக்கும் பல கெட்ட விஷயங்களிற்கும் நேரம் சரியில்லை, நல்ல நேரம் வரும்போது சரியாகிவிடும் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அப்படியிருக்க இந்த திருக்கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தால் கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றிவிடும் சக்தி படைத்தது என்று கூறி வருகின்றனர். இந்த கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் சிலார்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்குதான் ஸ்ரீ காலதேவி கோயில் உள்ளது. இங்கு சாதாரண நாட்களை விட பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே பிரசித்தி பெற்றுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோயிலின் கோபுரத்திலேயே 'நேரமே உலகம்' என்று எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், நட்சத்திரங்கள் போன்ற பலவற்றையும் இயக்கும் சக்தியை படைத்த காலதேவி கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தால் கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற முடியும் என்பது இந்த கோயிலின் அளிக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த கோயிலுக்கு சென்று தரிசித்து வந்த பலரது வாழ்விலும் நன்மைகள் நடந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.

காலதேவி கோயிலின் முக்கிய சிறப்பாக கூறப்படுவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மட்டுமே நடை திறக்கப்படும், சூரிய உதயத்திற்கு முன்பாக நடை சாத்தப்படும் என்பது ஆகும். பௌர்ணமி மட்டுமல்லாது அமாவாசை நாட்களிலும் விசேஷமான நாளாகவே இருந்து வருகிறது. கால தேவிக்கு உகந்த நாள் அமாவாசை தான் என்று அக்கோயிலின் பூசாரிகள் கூறி வருகின்றனர்.

Tags :
Featuresspecialtemple
Advertisement
Next Article