சிறப்பு தூய்மை முகாம் 3.0 கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் சார்பில் நடைபெறும்...!
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள அதன் அலுவலகங்களில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 ஐ மேற்கொண்டுள்ளது. 30ஆம் தேதிவரை ஆயத்தக் கட்டத்துடன் தொடங்கிய இந்தப் பிரச்சாரத்தின் போது கழிவுகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்வதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு 31ஆம்தேதி வரை இந்த இயக்கத்தின் செயலாக்க திட்டம் நடைபெற்றது. நிலுவையைக் குறைத்தல், இட மேலாண்மை மற்றும் அலுவலகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தின் ஆயத்தக் கட்டத்தில், இத்துறையானது நாடு முழுவதும் 289 இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது என திட்டமிடப்பட்டது.
நிலுவையில் உள்ள 36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், 1 நாடாளுமன்ற உத்தரவாதங்கள், 1 பிரதமர் அலுவலக குறிப்பு மற்றும் அனைத்து மக்கள் குறைகளையும் அமைச்சகம் கண்டறிந்து தீர்வு கண்டுள்ளது. நிருவாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறையால் நடத்தப்படும் எஸ்.சி.டி.பி.எம் இணையதளத்தில் தினசரி முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.