உங்கள் அழகு, இரவு தூங்குவதில் தான் இருக்கிறது தெரியுமா.? இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!
அதிகப்படியானோர் சோம்பேறித்தனத்திற்கு ஆளாகும் காரணத்தால் வீட்டிற்கு சென்றவுடன் கை கால்களை கழுவாமல் அப்படியே சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். பெண்கள் பலரும் இரவு தூங்குவதற்கு முன் சரும மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவார்கள். எனவே தான் பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை ஆண்களை விட குறைவாக இருக்கிறது. உடல் பாதிப்பும் கூட ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகத்தான் ஏற்படுகிறது. சிலர் தெரிந்து நிறைய தவறுகளை செய்கிறோம். அவற்றை தவிர்த்தால் நாமும் அழகாக இருக்கலாம். அது எப்படி என பார்க்கலாம்.
நிறைய பெண்கள் முடியை விரித்து போட்டு கொண்டு தான் தூங்குவார்கள். அப்போது உராய்வு ஏற்பட்டு மயிர் கால்கள் பலவீனமடையும். இதனால் முடி கொட்டும் பிரச்சினை ஏற்படும். பெரும்பாலான நபர்கள் தூங்குவதற்கு முன் இரவில் மது அருந்தும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். இரவு தூங்கும் போது நமது உடல் தன்னைத்தானே பழுது பார்த்துக் கொள்ளும். இவ்வாறு நாம் மது அருந்தும் போது அது தடுக்கப்படுகிறது. எனவே சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே இரவு தூங்குவதற்கு முன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
தூங்கும் போது பலரும் குப்புற படுத்து தூங்குவார்கள். இதுபோல குப்புற படுக்கவதால் உடலில் அழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மார்பகங்களில் அழுத்தம் ஏற்படுவதால் அது வடிவம் மாறி சுருக்கத்தை பெறலாம். எனவே நேராக படுத்து தூங்குவது அல்லது ஒரு பக்கமாக படுத்து தூங்குவது உடல் அழகை பராமரிக்க உதவி புரியும். ஏசியில் தூங்குவதை ஏதோ மிகவும் சவுகரியமான விஷயமாக பலரும் நினைத்து கொள்கின்றனர். உண்மையில் அது ஒரு வரம் அல்ல சாபம். பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் வேலை செய்கிறீர்கள் என்றால் இரவில் கூட இதுபோல செய்வது சரும செல்களை பாதிக்கிறது என்பதை உணர வேண்டும். சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை வெளியேறி வறட்சி அதிகமாகும். இதனால் விரைவிலேயே உங்களுக்கு வயதான தோற்றம் ஏற்படும்.
இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவது கண்களில் கருவளையத்தை ஏற்படுத்தும். மொபைல் போன் திரையில் நிறைய பாக்டீரியாக்கள் இருப்பதால் அதை நாம் முகத்திற்கு அருகே அதிக நேரம் வைத்திருக்கும் போது முகத்தில் பருக்கள், தேமல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். தலையணை முறையை வாரம் ஒரு முறை துவைத்து பயன்படுத்த வேண்டும். தலையணை மற்றும் பெட் சீட் பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளாகும் போது அது நமது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி நோய் ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் முகத்தில் பருக்களையும் முடி கொட்டும் பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. எனவே அதை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.