காலையில் எழுந்ததும், இந்த 5 விஷயங்களை செய்வீர்களா.? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.!
காலையில் எழுந்தவுடன் நாம் இந்த 5 விஷயத்தை செய்வது நமக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்று முன்னோர்களின் சாஸ்திரப்படி கூறப்படுகிறது. இதன், காரணமாக வீட்டில் ஒற்றுமை காணாமல் போய், சண்டை சச்சரவுகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவை குடும்பத்தில் ஏற்படும். தெரியாமல் கூட கீழ்காணும் இந்த விஷயங்களை காலை எழுந்தவுடன் செய்துவிடக்கூடாது. காலையில் எழுந்ததும், வீட்டில் இருக்கும் மற்றவர்களை திட்டுவது, வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, அண்டை வீட்டாருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சாபம் விடுவது போன்ற செயல்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஈடுபடக்கூடாது.
காலையில் எழுந்த பின்னர், கழுவாத கரையான பாத்திரங்கள் மற்றும் குப்பையான, சுத்தமில்லாத அறை இவற்றை எல்லாம் பார்க்கக் கூடாது. எனவே, அன்றாடம் இரவு நேரத்தில் சமையலறை மற்றும் வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கழுவாத பாத்திரங்களை அன்றாடம் இரவு கழுவிவிட்டு, அடுப்பு உள்ளிட்டவற்றை துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுபோல, காலையில் சீக்கிரம் எழுந்து விட வேண்டும். அதைவிடுத்து, நீண்ட நேரம் தூங்கி கொண்டிருப்பது, வீட்டில் நிதிநிலமையை மோசமாக்கும். இது, திடீர் உடல் நலக்குறைவையும், ஏற்படுத்தி வீண் செலவுகளுக்கு வழிவகை ஏற்படுத்தும்.
அதுபோல காலையில் அலட்சியமாக தாமதமாக எழுந்திருப்பது, லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தும். அதி காலையில் எழுந்தவுடன் பலருக்கு கண்ணாடி முன் நின்று பார்க்கின்ற பழக்கம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. இது போல கண்ணாடி முன்பாக நின்று கொண்டு பார்ப்பது தரித்திரத்தை ஏற்படுத்தும். மேலும், நமது வீட்டிற்கு வெளியில் அல்லது மாடியில் நின்று கொண்டு காலை நேரத்தில் நமது நிழலை எந்த காரணத்தை கொண்டும் பார்க்க கூடாது. இதுவும், வீட்டில் வறுமை ஏற்பட காரணமாக அமையும்.